எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
உற்றுப் பார்த்து, உணர்ந்து கொள்வோம்!
Dienstag, August 12, 2008
கண்ணுக்கு அழகான காட்சியெல்லாம்
உள்ளுக்குள் அழகென்று கொள்ள வேண்டாம்
மண்ணிலே உயர்நிலை நிற்பதெல்லாம்
உண்மையில் உயர்ந்ததாய் நம்ப வேண்டாம்
கண்ணிலே மைபூசி நின்று விட்டால்
குருடியும் அழகிதான்இ பார்ப்பதுண்டா?
மண்மீது உயர்விதம் பேசிவிட்டால்
மாந்தரில் அவர்மேன்மை என்று முண்டா?

போலிகள் “தரந்தனில் உயர்ந்தவர் நாம்.
போற்றுங்கள் எமை” யென்று சூழ வந்தால்
காலியா இவருக்குள் நற்குணங்கள்
போலியா எனத்தேடும்துணிவு வேண்டும்
பாலிலா வெறும்வெள்ளை வண்ண நீரும்
பாலென்று தனைக் காட்டல் உணர வேண்டும்
வாலிலா உடலுடை விலங்கும்கூட
புலியென்று பொய்யாடல் உணர வேண்டும்.

நீதியில் லாதவன் நீதி சொன்னால்
அ நீதியே நீதியாய்க் காட்டி நிற்பான்
தீயவன் நன்மைசெய் மார்க்கம் சொன்னால்
தின்மையை நன்மையாய்க் காட்டி நிற்பான்
பாயினில் படுப்பவன் விழுவதில்லை
பாவத்தை மறுப்பவன் தளர்வதில்லை
வாயினில் தேனொப்ப இனிப்பவர்கள்
வாழ்விதம் பிழையெனில் நன்மையில்லை.

கழுதையும் குதிரையும் ஒன்றுபோலக்
குட்டியாய் இருக்கையில் காணல்கூடும்
கழுகுபோல் குணமுடை கள்ளர்கூட
கழகங்கட் குள்ளுயர் வாகக்கூடும்
வெளுத்ததாய் இருப்பதால் சுண்ணம்கூட
வெளியர்க்குப் பால்போலத் தோன்றக்கூடும்
அழுத்தமாய் ஆழம்காண் நிலை தளர்ந்தால்
அநியாயர் நியாயராய் உயரல்கூடும்.


தமிழமுதம்
Wednesday, 06 July 2005 01:00
posted by Unknown @ 9:00 PM   0 comments
பாரடா! பாரினைப் பாரடா!
Montag, Juli 28, 2008
நன்னோக்கப் பெயர்களில் தீயவர் நிறைந்தாட
நல்லவர் கூட்டங்கள் தடுமாறல் பாரடா!
சின்னவர் இதயத்தில் வள்ளலாய் நடிக்கவே
சிறுதர்மங் கள்கூட பொய்யாதல் பாரடா!
தன்னோக்க வெற்றியே கொண்டான தீயவர்
நன்னோக்கர் ஆய்வேடம் போடுதல் கண்டுமே
தன்சொந்த நலந்தேடும் பொய்யர்கள் கூட்டமும்
தாமிணைந்து அவர்சேவை போற்றுதல் பாரடா!


நேர்மைக்கு நேர்மையாய் விளக்கமே சொல்லுவார்
நேர்மையே அற்றவர் என்பதாய் இருப்பதால்
நேர்மைக்கும் நீதிக்கும் தங்கமண் வெட்டியால்
நெடுபுதைகுழிகளே தோண்டுதல் பாரடா!
பார்போற்றும் புகழ் வேண்டும் என்பதற் காகவே
பார்வையில்லாதனும் கண்ணாடி அணிந்ததைக்
கூர்மையாய்ப் பார்த்திடும் கலைஞனாய்க் கணிக்கவே
பாமரர் பார்வையைக் கெடுக்கிறான் பாரடா!


இருளுக்குள் நிற்பவன் விளக்கினை மறைப்பதும்
இருளொன்றே ஒளியென்று அறிவுரை செய்வதும்
கருநாகம் தன்னையே நல்லபாம் பென்பதும்
“மருளாதே! அதைவளர். அதுபுண்யம்” என்பதும்
பெருவாரிப் பொதுப்பணி நாயகர் வழிகளாய்ப்
பெரும்பாலும் பரவியே வருவதைப் பாரடா!
கருத்தோடு அதைச் சுட்டும் எவரையும் எதிரியாய்
கருத்தற்றுப் பகைத்திடும் கொடுமையைப் பாரடா!


ஆலயம் தேடியே ஓடுவார் கூட்டம்கல்
ஆலயம் ஆய்மனம் வைத்திடல் பாரடா!
காலையும் மாலையும் கடவுளை வணங்குவான்
காலின் கீழ் பண்புகள் நசுங்கலைப் பாரடா!
பாலையும் நீரையும் கலந்ததால் நீருமே
பாலெனக் காண்பதைக் கவனமாய் பாரடா!
வாலையும் தலையையும் வித்(தி)யாசம் இன்றியே
ஒன்றாக நம்பிடும் மடைமையைப் பாரடா!


தமிழமுதம்
Wednesday, 22 June 2005
posted by Unknown @ 7:53 PM   0 comments
சவக்காட்டில் சுகம் தேடும் பேதையர்!
Montag, Juli 21, 2008
விரும்பிடும் காரியம் ஆவதற்காய் விரும்பியே தர்மத்தை உதைப்பராலே
பெருகிடும் தீமையின் பக்கம் ஆர்வம்; கருகிடும் சத்தியம்; தெரியவேண்டும்
வருகின்ற செல்வமோ புகழ் உறவோ நீதியை விட்டதாய் வந்து நின்றால்
பெருகின்ற இன்பத்தை ஏற்பவர்கள் சவக்காட்டில் சுகம்தேடும் பேதையர்தாம்.

கல்லாமை வழிகாணும் வழி தவிர்க்கும் கற்றாரோ கல்வியால் வழி தவிர்ப்பார்
இல்லாமை என்பதை முன்னிருத்தி இல்லாரை இழிஞராய் அவர் படைப்பார்
கல்லாமை இல்லாமை இரண்டுமற்ற நல்லாராய் மனிதரை வளர்ப்பதில்தான்
எல்லாரும் உழைத்திடல் நடப்பதற்கே கற்றாரும் சேர்வதே நல்லதப்பா!

பல்வேறு அனுபவம் பலர்க்கும் உண்டு பலநூறு பாடங்கள் அவற்றிலுண்டு
சொல்வேறு செயல்வேறு என்பரில்தான் தீமையே நிலையாக எங்குமுண்டு
நல்லாரின் வளம் கூடும் வழியமைத்தால் எல்லாரும் நலம்காணும் தினம்வரலாம்
பொல்லாரும் நல்லாராய் மாறினாலே அமைதியும் நிரந்தரம் ஆகுமன்பா!

கடலுக்குள் பல்வேறு மீன்களைப் போல் உடலத்தில் மனிதர்கள் கோடியுண்டு
வண்ணமாய் மனம் கொண்ட நல்லவர்கள் மத்தியில் கொடியரும் நிறைய உண்டு
எண்ணத்தில் நல்லதே எண்ணலில்லார் கண்ணி வைத்தே நம்மைத் தாக்க லுண்டு
கண்ணொப்ப நல்லொழுக் கத்தைக்காத்தே கவனமாய் வாழ்தலில் நன்மை யுண்டு.

வெண்பனி மென்மைதான் என்பதற்காய் வெண்பனிக் குள்மூழ்கித் துயிலல் ஆமோ?
தண்மொழிப் பேச்சுக்கள் என்பதற்காய்க் தரமற்றோர் அகம் ஏற்று வாழலாமோ?
புண்படும் விதம்பேசின் மட்டும்குற்றம் எனநல்ல மனிதரை ஒதுக்கி நின்றால்
பண்பற்ற கள்ளரும் நல்லவர்போல் நமைஏய்க்கும் வழிவரும்; ஏற்கலாமோ?


தமிழமுதம்
Saturday, 04 June 2005
posted by Unknown @ 7:22 PM   0 comments
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்